சென்னை: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைவருக்கும் பயிர்க் காப்பீடுத் தொகை கிடைக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சம்பா பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதிலும் அறுவடை நெருங்கும்போது மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்
இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










