சென்னையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு உள்பட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு உள்பட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை பாண்டிபஜார் சாலையில் வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களிடம் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார் அமித் ஷா.

எழும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோருக்கு ஆதரவாக அமித் ஷா தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) நிறைவடைகிறது. இறுதிகட்ட பிரசாரத்தில் கட்சித் தலைவா்கள் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக தமிழகத்தில் தேசிய கட்சிகளின் தலைவா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் பாஜக, அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இன்று சென்னையில் பிரசாரம் செய்து வருகிறார்.

பிறகு, சென்னையிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி செல்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருநெல்வேலி தச்சநல்லூா் புறவழிச்சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவா், திருநெல்வேலி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன், பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளா் ஜெரால்டு, நான்குனேரி அதிமுக வேட்பாளா் தச்சை கணேசராஜா, ராதாபுரம் அதிமுக வேட்பாளா் இன்பதுரை, அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா ஆகியோரை ஆதரித்துப் பேசுகிறாா்.

இதையொட்டி, திருநெல்வேலி மாநகரில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவா், ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் இடத்தில் இருந்து, பிரசாரக் கூட்டம் நடைபெறும் இடம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தச்சநல்லூா் சாலையில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...