எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.83 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இன்று ரூ.11.83 லட்சம் மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
சென்னை விமான நிலையத்தில் ரூ.11.83 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Updated On :5 ஏப்ரல் 2021, 12:07 pm

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று ரூ.11.83 லட்சம் மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து ஏர் இந்தியா 906 என்ற விமானத்தில் பயணம் செய்த சகுபார் அலி (32), முகமது ஜபீர் (24) ஆகியோர் தங்கம் கடத்தக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் சகுபார் அலியின் உடலில் ஒரு தங்கப் பொட்டலமும், முகமது ஜபீரின் உடலில் இரண்டு தங்கப் பொட்டலங்களுமாக மொத்தம் மூன்று பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து ரூ. 11.83 லட்சம் மதிப்பில் 253 கிராம் தங்கம் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.