வாக்குச் சாவடிக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம்: நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்

வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு செல்லும் போது அனுமதிக்கப்பட்ட ஆவணங்களுடன் முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
வாக்குச் சாவடிக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம்
வாக்குச் சாவடிக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம்
Updated on
1 min read

வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு செல்லும் போது அனுமதிக்கப்பட்ட ஆவணங்களுடன் முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்கு காவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பி வைக்கும் பணியை ஆட்சியர் பிரவீன் பி நாயர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, ஆட்சியர் பி. நாயர் செய்தியாளர்களிடம் கூறியது:

வேதாரண்யம் தொகுதியில் 271 வாக்குப் பதிவு மையங்களும், 44 துணை வாக்குப் பதிவு மையங்களும் அமைந்துள்ளன. இங்கு, கருப்பம்புலம், தேத்தாக்குடி, வாய்மேடு, தலைஞாயிறு உள்ளிட்ட 14 மையங்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. 

நாகை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1861 வாக்குச் சாவடிகள், 350 துணை வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை மேற்கொள்ள 8, 975 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவை தவிர, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் 3722  பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மாவட்டத்தில் 931 வாக்குப் பதிவு மையங்கள் காணொலி காட்சி மூலம் கண்காணிக்கப்படவுள்ளது. முகக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து, கையுறை அளித்த பின்னரே வாக்குப் பதிவுக்கு அனுமதிக்கப்படும் என்றார். 

வேதாரண்யத்தில் வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரம் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைக்கும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியர் பிரவீன் பி நாயர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com