47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாஜக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: கமல் புகார் 

கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்த விவகாரம் தொடர்பாக, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

News image
Updated On :6 ஏப்ரல் 2021, 9:59 am

DIN

கோவை: கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்த விவகாரம் தொடர்பாக, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கமல்ஹாசன் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. 

கோவை தெற்கு சட்டப்பேரவைத்தொகுதி மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கமல்ஹாசன் முன்னிலையில், அக்கட்சியின் வழக்குரைஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளரும்,  கோவை தெற்கு தொகுதியின் தேர்தல் முகவருமான உதயகுமார், கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பது: கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கெம்பட்டி காலனியில், வாக்காளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கடையின் பெயர் அச்சிடப்பட்ட டோக்கன்களை சிலர் விநியோகித்து வருகின்றனர்.

அந்த டோக்கன்களைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்பட்டும் வருகிறது. இந்தச் சட்டத்திற்கு புறம்பான செயல்களால், அப்பகுதியில் அசாதரமாண சூழ்நிலை நிலவுகிறது.

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் தான் இந்த டோக்கன்களை விநியோகம் செய்து வருவதாகவும் தெரிய வருகிறது. எனவே, உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டத்திற்கு புறம்பாகச் செயல்பட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.