ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: திருமாவளவன்

திமுக அறுதிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார் சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.

News image
அங்கனூரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
Updated On :6 ஏப்ரல் 2021, 8:37 am

DIN

திமுக அறுதிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார் சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த அங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தனது வாக்கினை செவ்வாய்க்கிழமை பதிவு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

பாரதிய ஜனதா கட்சியின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழக மக்கள் தங்கள் வாக்கினைச் செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது வரவேற்கத்தக்கது. திமுக முக்கிய பிரமுகர்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

அப்படிப்பார்த்தால் அதிமுக அமைச்சர்கள் போட்டியிடக் கூடிய அனைத்து தொகுதிகளின் தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் அனைத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிமுக செயல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக உள்ளவர்களுக்குச் சேவை செய்யும் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் என்பது தேர்தலை நடத்தித் தரக்கூடிய நிறுவனமாகவே உள்ளது. தேர்தல் நடத்தை விதி மீறல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு தன்னாட்சி அமைப்பாக இல்லாதது வேதனை அளிக்கும் செயலாகும். தேர்தலில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறும். திமுக அருதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். விடுதலை சிறுத்தைகள் போட்டியிடக்கூடிய பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தற்போது தமிழகத்தில் ஸ்டாலினுக்கு ஆதரவான அலை வீசி வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.