தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசி அருகே நூற்பாலையில் தீ விபத்து

அவிநாசி அருகே பூலக்காட்டுப்பாளையம் நூற்பாலையில் திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

News image

நூற்பாலையில் தீ விபத்து

Updated On :12 ஏப்ரல் 2021, 3:07 pm

DIN

அவிநாசி: அவிநாசி அருகே பூலக்காட்டுப்பாளையம் நூற்பாலையில் திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி பூலக்காட்டுப்பாளையத்தில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் நாள்தோறும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல திங்கள்கிழமை திறக்கப்பட்டு, இயங்கி வந்தது. திடிரென மாலை நூற்பாலையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் உள்ளிட்டவை முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த பாலசுப்பிரமணியம் (அவிநாசி), பாஸ்கர் (திருப்பூர்) ஆகிய இரு  தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Story image

இருப்பினும் பஞ்சு, பனியன் வேஸ்ட், நூல், இயந்திரங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது.

இதில் அதிஷ்டவசமாக 7-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிர் தப்பினர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.