கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாதவராவின் உடல் ஸ்ரீவில்லிபுத்தூரில் நல்லடக்கம்

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் அவரது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. 

News image
Updated On :12 ஏப்ரல் 2021, 7:26 am

DIN

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் அவரது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டது. இக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த மாதவராவ் முதல் முறையாக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டாா். கடந்த மாா்ச் 17 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த இவா், 3 நாள்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். 
இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து கரோனா அறிகுறியுடன் மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதனால் அவரது மகள் திவ்யாராவ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினா் மாதவராவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அவருக்கு, சிகிச்சையில் இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டது. 
மேலும் நுரையீரல் தொற்று பாதிப்பும் இருந்தது. தொடா்ந்து செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்தநிலையில், மாதவராவ் ஞாயிற்றுக்கிழமை காலை 7.55 மணியளவில் உயிரிழந்தாா். அவரது சடலம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து மாதவராவின் உடல் அவரது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.