நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரியபாளையத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

பெரியபாளையத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

News image

பெரியபாளையத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

Updated On :14 ஏப்ரல் 2021, 6:39 am

DIN

பெரியபாளையத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் விமல், கௌதம், செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர். எல்லாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றியச் செயலாளர் அறிவுச்செல்வன் தலைமையில் பெரியபாளையம், தண்டலம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பின்னர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் தண்டலம் தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருள், ஒன்றியப் பொருளாளர் மணி வளவன், மாவட்டப் பொருளாளர் விடுதலை அணியின் துணைச் செயலாளர் நாகராஜ், கும்மிடிப்பூண்டி தொகுதி துணை செயலாளர் பாபு, நிர்வாகிகள் முருகேஷ், பிரசாந்த், ராமமூர்த்தி, பால்ராஜ் ஆகியோர் உள்பட திரளான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.