சித்திரை விஷு திருவிழாவிற்குத் தடை: பக்தர்கள் இல்லாததால் வெறிச்சோடிய பாபநாசம்
கரோனா பரவல் காரணமாக சித்திரை விஷு திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது பாபநாசம்.


அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் சிவன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை 1 ஆம் தேதி சித்திரை விஷு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவர். இதற்காக ஏப்.5 ஆம் தேதி சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவந்தது.
இந்நிலையில் ஏப்.10 முதல் தமிழக அரசு கரோனாத் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து சித்திரை விஷு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம், அகஸ்தியருக்கு திருமணக் கோலத்தில் சாமி - அம்பாள் காட்சியளிப்பது ரத்து செய்யப்பட்டது. சித்திரை விஷு வழிபாடு மற்றும் தாமிரவருணியில் புனித நீராட பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் பாபநாசத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாமிரவருணியில் நீராடவும் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களின்றி பாபநாசம் வெறிச்சோடியது.
கடந்த ஆண்டும் கரோனா பரவல் காரணமாக சித்திரை விஷு திருவிழா நடைபெறாத நிலையில் இரண்டாவது ஆண்டாக நிகழாண்டும் கொடியேற்றப்பட்டு சித்திரை விஷு திருவிழா நடைபெறாததால் பக்தர்கள் கவலையடைந்தனர். மேலும் பேருந்து போக்குவரத்து இல்லாமலும் சித்திரைத் திருவிழா சிறப்புக் கடைகள் திறக்கப்படாமலும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...