மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா?: இன்று ஆலோசனை

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து இன்று (ஏப். 15) ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2021, 5:52 am

DIN

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து இன்று (ஏப். 15) ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பரவி வரும் சூழலில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் உள்ள சவால்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. 

ஏற்கெனவே சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி மே மாதம் பொதுத்தேர்வை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிகல்விதுறை செயலாளர், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.