ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குட்கா விவகாரம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் மேல்முறையீட்டு வழக்கில் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :19 ஏப்ரல் 2021, 8:33 am

DIN

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை எடுத்து வந்தனர். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் குழு சார்பில் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், மஞ்சுளா ஆகியோர் அமர்வு முன்   விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உரிமைக்குழு நீடிக்கிறதா? என்ற கேள்வியை முன்வைத்தனர். அப்போது சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சோமையாஜி, இதே அரசு அமைந்தால் நீடிக்கும் என தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மேல்முறையீடு மனுவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள், பாஜகவில் இணைந்த கு.க.செல்வம் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.