ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனா தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள்

அனைத்து கரோனா தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து, முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2021, 7:53 am

அனைத்து கரோனா தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து, முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக நீதி முன்னேற்றத்துக்கான மையத்தின் இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் பொது நல மனுவில், கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளைத்  தடுப்பூசி செலுத்துபவர்களுக்கான முன்னுரிமை பட்டியலில் சேர்க்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றுவதில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர். 

இதனால் கரோனோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகளைத் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கான முன்னுரிமை பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்டம்தோறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்க முடியுமா என விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் , மாற்றுத்திறனாளிகளை முன்னுரிமை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதால், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட  நீதிபதிகள், அனைத்து தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் கவுண்டர்கள் அமைத்து, அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த சிறப்பு கவுண்டர்களை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில்  சாய்தள பாதை உள்ளிட்ட வசதிகளுடன் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், 18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு குறைவானவர்களுக்குத் தடுப்பூசி போடுவதால் ஏதேனும் எதிர்விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து மருந்து தயாரிப்பு  நிறுவனங்களுடன் கலந்து பேசி மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்து 3 நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.