டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிருஷ்ணகிரி: துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை 

கிருஷ்ணகிரி அருகே காவலர்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News image
தற்கொலை செய்துகொண்ட ஆயுதப்படை காவலர் அன்பரசன்
Updated On :22 ஏப்ரல் 2021, 7:58 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காவலர்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்கு கிருஷ்ணகிரியில் உள்ள பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த, ஆயுதப்படை காவலர் அன்பரசன் என்பவர், நீதிபதியின் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று இரவு வழக்கம்போல நீதிமன்ற வளாகத்துக்கு பணிக்காக வந்தார். இந்த நிலையில் அன்பரசன் இன்று காலை நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்குக்காக நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு பெரும் கூட்டமாக கூடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். தற்கொலை செய்துகொண்ட ஆயுதப்படை காவலர் அன்பரசுக்கு மூன்று மாதங்கள் முன்புதான் திருமணம் நடைபெற்றது.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணியில் மன அழுத்தமா? அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா? வேறு ஏதேனும் காரணங்களா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தகவலறிந்த தாலுகா காவலர்கள் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று காவலர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.