மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். 

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 10:43 am

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அச்சம் தவிர்ப்போம் அறிவியலால் வெல்வோம்" எனும் முன்னெடுப்பின் கீழ் சென்னை எழும்பூர், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை இன்று வழங்கினார்.

சென்னை எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சூளை, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி, ஜி.கே.எம் காலனி 34-வது தெரு, கே.சி.கார்டன், திரு.வி.க. நகர் மற்றும் வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கிருமி நாசினி, முகக் கவசம், சோப்பு உள்ளிட்டவற்றோடு கபசுரக் குடிநீர், தலா ஒருவருக்கு 30 முட்டைகள் வீதம் வழங்கினார்.

அதுபோது, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு, எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிச்சந்திரன், வேட்பாளர் பரந்தாமன், திரு.வி.க. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கநாதன், கொளத்தூர் பகுதிச் செயலாளர்கள் ஐ.சி.எஃப். முரளி, நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.