போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியது!

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து பொதுக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Updated On :23 ஏப்ரல் 2021, 3:20 am

DIN

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து பொதுக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனுதாக்கல் செய்திருந்தது.

விசாரணையில், ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு தரப்பில் அனுமதி அளிப்பதாக மத்திய அரசின் வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை பதில் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமையில் கருத்துக்கேட்புக் கூட்டமானது நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் தெரிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.