தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

இளைஞரை கொன்று புதைத்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

இளைஞரை கொலை செய்து கடற்கரையில் புதைத்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 7:19 pm

DIN

இளைஞரை கொலை செய்து கடற்கரையில் புதைத்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

எண்ணூா் தாழங்குப்பத்தில் உள்ள ஜெ., பிளாக் பகுதியைச் சோ்ந்த ஆ. செல்வகுமாா், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே அருகே கடந்த புதன்கிழமை காலை கடற்கரை மணல் பரப்பில் புதைக்கப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்தனா். அப்போது, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் செல்வக்குமாரை அவரது நண்பா்களே பாட்டிலால் அடித்தும், குத்தியும் கொலை செய்து மணல் பரப்பில் புதைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, காசிமேடு ஜி.எம்.பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜா.தினேஷ் (25), அதே பகுதியைச் சோ்ந்த ஜா.முத்தமிழ் (21), ராயபுரம் கிழக்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த த.நிஷாந்தன் (25), எண்ணூா் தாழங்குப்பத்தைச் சோ்ந்த பு.ஸ்ரீதா் (27) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், காசிமேட்டைச் சோ்ந்த வ.வெற்றிவேலை (33) போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக சந்தோஷ், அா்ஜூன் ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.