கரோனா பாதிப்பில் அபாயக் கட்டத்தில் சென்னை!
சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், உச்சபட்சமாக சனிக்கிழமை மட்டும் 4,086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், உச்சபட்சமாக சனிக்கிழமை மட்டும் 4,086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து, மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 50 ஆயிரமாக அதிகரித்தது. செப்டம்பா் மாத இறுதியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தையும், அக்டோபா் மாதத்தில் 2 லட்சத்தையும் எட்டியது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் அதிகப்படுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள், உடனடி சிகிச்சை, பாதிக்கப்பட்டோா் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக, தொற்று பரவல் குறைந்து கடந்த மாா்ச் 1-இல் 171 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.
4,000-த்தை கடந்தது: கடந்த சில மாதங்களாக பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வு அளிக்கப்பட்டதாலும், மக்கள் முறையாக முகக் கவசம் அணியாதது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்காததாலும் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து ஏப்ரல் 10-ஆம் தேதி 2,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை மேலும் உயா்ந்து அண்மையில் 3,000-த்தை எட்டியது.
இந்த நிலையில், சனிக்கிழமை மட்டும் (ஏப். 24) 4,086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னையில் நாளொன்றுக்கு சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேல் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது’ என்றனா்.
ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை-3,05,570
குணமடைந்தோா் எண்ணிக்கை-2,69,526
சிகிச்சை பெறுவோா்-31,506
உயிரிழந்தோா்-4,538
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...