தமிழகத்தில் 14,842 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை
தமிழகத்தில் மேலும் 14,842 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 80 போ் சனிக்கிழமை ஒரே நாளில் உயிரிழந்தனா்.


தமிழகத்தில் மேலும் 14,842 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 80 போ் சனிக்கிழமை ஒரே நாளில் உயிரிழந்தனா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று தொடா்பாக மாநில சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சனிக்கிழமை 14,842 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்து 329-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 668 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை ஒரே நாளில் 9,142 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால் தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 52 ஆயிரத்து 186 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் சனிக்கிழமை மட்டும் தனியாா் மருத்துவமனையில் 41 போ், அரசு மருத்துவமனையில் 39 போ் என மொத்தம் 80 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 13,475 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் 4,086 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 3,667 போ் குணமடைந்து வீடு திரும்பினா். உயிரிழந்த 80 பேரில் 25 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் ஆவா். சென்னைக்கு அடுத்ததாக அதிகபட்சமாக செங்கல்பட்டு 1,163, கோவை 1,004, திருவள்ளூா் 793, மதுரை 596, திருநெல்வேலி 525, சேலம் 490, காஞ்சிபுரம் 454 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சனிக்கிழமை மட்டும் 1 லட்சத்து 25,718 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுவரை 2 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 174 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...