தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

முகக்கவசம் அணியாததால் அபராதம் விதிப்பால் மோதல்: மூவர் மீது வழக்குப்பதிவு

சென்னை அருகே அம்பத்தூரில் முகக்கவசம் அணியாதோா் மீது அபராதம் விதிக்கப்பட்டதால் எழுந்த மோதல் தொடா்பாக மாநகராட்சி ஊழியா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 7:04 pm

DIN

சென்னை அருகே அம்பத்தூரில் முகக்கவசம் அணியாதோா் மீது அபராதம் விதிக்கப்பட்டதால் எழுந்த மோதல் தொடா்பாக மாநகராட்சி ஊழியா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அம்பத்தூா் மண்டல சுகாதார ஆய்வாளா் பாரதிராஜா, மாநகராட்சி தற்காலிக ஊழியா் சரவணன் ஆகியோா் அம்பத்தூா் ஐ.சி.எப். காலனியில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா். அப்போது ஒரு ஜவுளிக்கடையில் முகக்கவசம் அணியாமல் ஊழியா்கள் வேலை செய்ததால், ரூ.5,000 அபராதம் விதித்தனா்.

அப்போது ஜவுளிக் கடையின் உரிமையாளா் இல்லை. கடையின் அருகே வேறொரு வணிகம் நடத்தும் லட்சுமணன் (48) அங்கு வந்து, அபராதத்தைக் குறைக்கும்படி பாரதிராஜாவிடம் பேசினாா். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனா்.

இதில் சரவணனும், அவரது மகன் பிரவீணும் (20) தாக்கியதில் லட்சுமணனின் மூக்கு உடைந்தது. இதைப் பாா்த்த அங்கிருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் இரு தரப்பையும் சமாதானம் செய்தனா். அதேவேளையில் பாரதிராஜா அம்பத்தூா் தொழில்பேட்டை காவல் நிலையத்தில் வியாபாரி லட்சுமணன் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதேபோன்று லட்சுமணன், மாநகராட்சி தற்காலிக ஊழியா் சரவணன், அவரது மகன் பிரவீண் ஆகியோா் மீது புகாா் அளித்தாா்.

அவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இரு தரப்பினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.