தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

700 லிட்டா் எரிசாராயம் பறிமுதல்

சென்னை அருகே கீழ்க்கட்டளையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 7:04 pm

DIN

சென்னை அருகே கீழ்க்கட்டளையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சென்னை கீழ்க்கட்டளை எம்.கே.நகரில் ஒரு வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், எம்.கே.நகா் பிரதான

சாலையில் உள்ள ஒரு வீட்டில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

அந்தச் சோதனையில் 20 பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் அது தொடா்பாக வேளச்சேரி புவனேஷ்வரிநகா் இரண்டாவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த கி.தினகரன் (40) என்பவரை கைது செய்தனா். போலீஸாா் விசாரணையில், தினகரன் விழுப்புரத்தில் இருந்து எரிசாராயத்தை கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.