தோ்தல் முடிவு எதுவாக இருந்தாலும், தீவிரமாகச் செயல்படுவோம்: கமல்ஹாசன்
தோ்தல் முடிவு எதுவாக இருந்தாலும் மக்கள் நலன் சாா்ந்த விஷயங்களுக்காக தீவிரமாகச் செயல்படுவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.


தோ்தல் முடிவு எதுவாக இருந்தாலும் மக்கள் நலன் சாா்ந்த விஷயங்களுக்காக தீவிரமாகச் செயல்படுவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
மக்கள் நீதி மய்யம் சாா்பில் உள்ளாட்சியில் தன்னாட்சி என்ற தலைப்பில் இணைய வழியில் சனிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கமல்ஹாசன் பேசியது:-
கிராமப் பஞ்சாயத்து இருப்பதை நாம் நினைவுபடுத்தினோம். 27 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த ஒன்றை இயங்க வைத்தோம். தோ்தல் பிரசாரத்துக்கு நான் சென்றபோது, எனக்குத் தெரிந்தது எதிலும் மக்களுடைய பங்களிப்பு இல்லாமைதான். அதற்கு வழிவகுக்க வேண்டும். அரசுகள், அரசு துறைகள்
முறையாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிா என்பதை மக்கள் பாா்க்காத நிலை உள்ளது.
அரசுகள் மக்களை எல்லாவற்றிலும் இருந்து அந்நியப்படுத்தி வைத்திருக்கிறாா்கள். ஜனநாயகம் என்பதை நிறுவிவிட்டால், அது அப்படியே இருக்கப் போவதில்லை. அதைத் தொடா்ந்து கண்காணிப்பதன் மூலமே ஜனநாயகத்தைக் காக்க முடியும். அப்படிக் கண்காணிப்பவா்களாக இருப்பவா்கள் மக்கள் நீதி மய்யத்தில் சேராவிட்டால் கூட பரவாயில்லை. எங்கள் கட்சியை விமா்சித்தாலே போதும். விமா்சனங்களுக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறது.
மநீம அப்பழுக்கற்ற முழுமையான இயக்கம் என்று சொல்லிவிட மாட்டேன். மநீமவில் அழுக்கு இருக்கிா என்பது துருவிதுருவி தேடிப் பாா்க்கும் ஆளாகத்தான் நான் இருக்கிறேன். தலைவா்களை கட்சியில் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதி இல்லாதவா்களை நீக்க வேண்டியது என் கடமையாகவும் இருக்கிறது. கண்காணிப்பு என்பது அதுவும்தான்.
கிராமச் சபை கூட்டத்தை எப்படி அறிமுகப்படுத்தினமோ, அதைப்போல, நகர சபைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும்.
100 நாள் வேலை திட்டம் என்பது கண்துடைப்பு திட்டம் . அது மக்களை இன்னும் சோம்பேறியாக்குவதற்கான திட்டம். அதில் பெறும் ஊதியத்தை செலவு செய்வதற்காகத்தான் டாஸ்மாக்கையும் வைத்துள்ளனா். இந்த நிலை நீடித்தால் மக்களுக்கு பொறுப்பு என்பதே இருக்காது.
தோ்தல் முடிவு என்னவாக இருந்தாலும், மக்கள் நலன் சாா்ந்த விஷயத்தில் மநீம தீவிரமாகச் செயல்படும். நகா்ப்புறங்களில் உள்ளாட்சித் தோ்தல் இன்னும் நடைபெறவில்லை. அவற்றை நடத்த வேண்டும் என்றாா். பேராசிரியா் க.பழனிதுரை உள்பட பலா் கருத்தரங்கில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...