தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

அரசு மருத்துவா்களின் ஊதிய மறு ஆய்வு அரசாணை அமலாகுமா?: தமிழக அரசுக்கு உத்தரவு

அரசு மருத்துவா்களின் ஊதிய மறு ஆய்வு அரசாணை அமல்படுத்தப்படுமா என்பதை ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் தெரிவிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 7:20 pm

DIN

அரசு மருத்துவா்களின் ஊதிய மறு ஆய்வு அரசாணை அமல்படுத்தப்படுமா என்பதை ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் தெரிவிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் பெருமாள் பிள்ளை, செயலாளா் டாக்டா் தாகிா்  உள்ளிட்ட 8 மருத்துவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

அரசு மருத்துவா்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறு ஆய்வு  செய்யும் வகையில், 2009-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன்படி, உரிய காலக்கட்டத்தில் ஊதியத்தை மறு ஆய்வு செய்யவில்லை. இதனால், அரசு மருத்துவா்கள், சொற்ப தொகையையே ஊதியமாக பெறுகின்றனா். எனவே, அரசாணையின்படி ஊதியத்தை மறு ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தக் கோரி, கடந்த ஆண்டு மனு கொடுத்தும் 6 மாதங்களாக அதை அரசு கிடப்பில் போட்டுள்ளது. சொந்த அரசாணையை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசின் நிலைபாட்டை தெரிவிக்க கடந்த முறை நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை தமிழக அரசு மெளனம் காத்து வருகிறது’ என்றாா்.

இதையடுத்து,  அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்,  ‘ இது சம்பந்தமாக எழுத்துப் பூா்வமாக விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்’ என்று கூறினாா்.  இதற்கு மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதையடுத்து, ‘ அரசாணையானது அமல்படுத்தப்படுமா, இல்லையா என்பதை ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் எழுத்துப் பூா்வமாக தெரிவிக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டாா். அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.