மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அனைத்துக்கட்சி கூட்டம்: திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி பங்கேற்பு

ஸ்டெர்லைட் தொடர்பான நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி ஆகியோர் பங்கேற்கின்றனர்.  

News image
கோப்புப்படம்
Updated On :25 ஏப்ரல் 2021, 2:35 pm

DIN

ஸ்டெர்லைட் தொடர்பான நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி ஆகியோர் பங்கேற்கின்றனர். 
ஸ்டெர்லைட் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச்செயலத்தில் நாளை காலை 9.15 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. 
ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்த நிலையில் கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்க உள்ளனர். இதனிடையே திமுக பொதுச்செயலர் துரைமுருகன் கூறுகையில், ஸ்டெர்லைட்டில் திமுகவின் நிலைப்பாடு குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிப்போம். 
அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி பங்கேற்பார்கள். பிற மாநிலங்களைப்போல தமிழகத்திற்கும் ஆக்சிஜன் தர வேண்டுமென்பதே திமுகவின் கோரிக்கை என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.