போடியில் முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின
போடியில் ஞாயிறன்று, முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.


போடி: போடியில் ஞாயிறன்று, முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக ஏப்.20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதனால் இன்று முழு ஊரடங்கு நாளையொட்டி போடி நகரில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. காலை முதலே காவல்துறையினர் ரோந்து சென்றனர். இறைச்சிக் கடைகளும் திறக்கப்படவில்லை.
போடி பகுதியில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தது. செய்தித்தாள் விநியோகம் செய்யும் கடைகளும் மூடப்பட்டு செய்தித்தாள்கள் வெளியில் வைத்து விநியோகம் செய்யப்பட்டது. பெட்ரோல் நிலையங்கள் இயங்கியது. வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. காவல்துறை, நகராட்சி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...