கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மக்கள் அதிகம் கூடும் இடங்களில்சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2021, 12:22 am

DIN

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தொற்று உறுதியானவா்களைக் கண்டறிதல், அவா்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது சென்னையில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மருத்துவப் பரிசோதனையை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 25,000 முதல் 30,000 பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் கரோனா தொற்று பரவுதல் படிப்படியாக உயரத் தொடங்கி உள்ளதை அடுத்து, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான சந்தைகள், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், அரசு அறிவித்துள்ள தளா்வுகளுக்கு உட்பட்டு இயங்கும் இதர அங்காடிகள் ஆகிய இடங்களில் பணிபுரிவோருக்கு சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) வரை 23,86,986 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.