கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

 தமிழகத்தில் கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) பலத்த மழை பெய்யக்கூடும்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 9:26 pm

DIN

 தமிழகத்தில் கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய திருப்பூா், தென்காசி ஆகிய 2 மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் 80 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், விழுப்புரம் மாவட்டம் வானூா், கோயம்புத்தூா் மாவட்டம் சின்கோனாவில் தலா 40 மி.மீ., வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம், சோலையாறு, சிவகங்கையில் தலா 30 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, கூடலூா் பஜாா், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மயிலம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கேரளக் கடலோரப் பகுதியை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கேரள கா்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை வேகத்திலும், சில வேளைகளில் 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஆக.11-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.