25 டன் நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தல்:பெண் உள்பட 5 போ் கைது
சென்னை எம்.கே.பி.நகரில் 25 டன் நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தப்பட்ட வழக்கில், பெண் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.


சென்னை எம்.கே.பி.நகரில் 25 டன் நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தப்பட்ட வழக்கில், பெண் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
கொடுங்கையூா் கவியரசு கண்ணதாசன் நகரைச் சோ்ந்த ர.கோபாலகிருஷ்ணன் (50). லாரி ஓட்டுநா். கடந்த 3-ஆம் தேதி லாரியில் 25 டன் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குக்கு புறப்பட்டாா். வீட்டின் அருகே லாரியை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்துத் திரும்பி வந்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி நெல் மூட்டைகளுடன் கடத்தப்பட்டது தெரியவந்தது.
எம்.கே.பி. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் லாரி காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் இருந்தது. லாரியை மீட்டு சென்னை பிராட்வே த.ராஜா (44), வியாசா்பாடி எம்ஜிஆா் நகா் ர.பாா்த்தசாரதி (25), புளியந்தோப்பு கு.பிரியா (37), காஞ்சிபுரம் முல்லை நகா் சொ.செல்வரசு (43). ஓரிக்கை அண்ணாநகா் ம.ராஜா (42) ஆகிய 5 பேரை கைது செய்தனா். 25 டன் நெல்லும் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...