வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வாட்ஸ்ஆப்பில் பலரும் விரும்பும் புதிய வசதி அறிமுகம் 

முகநூல் நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடகமான வாட்ஸ்ஆப்பில் அண்மையில் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், பலரும் விரும்பும் ஒரு வசதியும் இடம்பெற்றுள்ளது.

News image
வாட்ஸ்ஆப்பில் பலரும் விரும்பும் புதிய வசதி அறிமுகம் 
Updated On :9 ஆகஸ்ட் 2021, 9:04 am

DIN


முகநூல் நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடகமான வாட்ஸ்ஆப்பில் அண்மையில் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், பலரும் விரும்பும் ஒரு வசதியும் இடம்பெற்றுள்ளது.

அதாவது, ஆர்க்கைவ்ட் சாட்ஸ் போல்டர் என்ற புதிய வசதி மூலம், உங்களுக்குத் தேவையாற்ற சாட்டுஸ்களை, நிரந்தரமாக மறைத்து வைக்க புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.

வழக்கமாக, நாம் விரும்பாத அல்லது தேவையற்ற சாட்ஸ்களை ஆர்க்கைவ் செய்து வைத்திருப்போம். அது அப்போதைக்கு கீழே மறைந்திருந்தாலும், எப்போது அந்த எண்ணிலிருந்து புதிய தகவல் வருகிறதோ, அப்போது அது  ஏனைய தகவல்களைப் போலவே முதல் வரிசையில் வந்து நின்று கொள்ளும். 

ஆனால், இந்த புதிய வசதியில், ஒரு முறை ஒரு எண்ணை ஆர்க்கைவ்வில் போட்டுவிட்டால், அது ஆர்க்கைவ்டு சாட்ஸ் பெட்டகத்தில் பத்திரமாக இருந்து கொள்ளும். புதிய தகவல்கள் அந்த எண்ணிலோ குழுவிலோ அனுப்பப்பட்டாலும், அது மேல் வரிசைக்கு வராமல், பத்திரமாக ஆர்க்கைவ்டு சாட்ஸ் பெட்டகத்திலேயே இருக்கும்.

எப்போது நீங்களாக அந்த எண்ணை ஆர்க்கைவ்டு பெட்டகத்திலிருந்து நீக்குகிறீர்களோ அப்போது மட்டுமே அது பட்டியலின் மேல் பகுதிக்கு வரும்.  எனவே, ஆர்க்கைவ்டு செய்த எண் அல்லது குழு எப்போதுமே அங்கேயே இருக்கும் வகையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த புதிய வசதி மூலம் தேவையற்ற தகவல்கள் உங்கள் கண்ணில் படுவதிலிருந்து நீங்கள் தப்பிக்க வழி பிறந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.