ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

'அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும்' - கே.டி. ராகவன்

அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் என பாஜக மாநிலச் செயலாளர் கே.டி. ராகவன் தெரிவித்துள்ளார். 

News image
பாஜக மாநிலச் செயலாளர் கே.டி. ராகவன்
Updated On :10 ஆகஸ்ட் 2021, 8:25 am

DIN

அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் என பாஜக மாநிலச் செயலாளர் கே.டி. ராகவன் தெரிவித்துள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்குச் சொந்தமான இடங்கள் என 52 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றன. 

இந்நிலையில், பாஜக மாநிலச் செயலாளர் கே.டி. ராகவன், அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடக்கும் சோதனை திமுகவின் அரசியல் பழிவாங்கும் நோக்கமாகவே தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம் என இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.