இரு வகை தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஆராய்ச்சி: வேலூா் சிஎம்சி-க்கு அனுமதி
ஒரே நபருக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இருவேறு கரோனா தடுப்பூசிகளையும் செலுத்துவது தொடா்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள


ஒரே நபருக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இருவேறு கரோனா தடுப்பூசிகளையும் செலுத்துவது தொடா்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவா் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளாா். அதன்படி, 300 தன்னாா்வலா்களுக்கு இருவேறு தடுப்பூசிகளையும் செலுத்தி பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் முதலாவது தவணையிலும், இரண்டாவது தவணையிலும் ஒரே வகை தடுப்பூசியை மட்டுமே செலுத்திக் கொள்வதற்கு மட்டுமே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு ஓா் ஆய்வு முடிவை ஐசிஎம்ஆா் வெளியிட்டது. அதில், முதல் தவணையில் ஒரு வகை தடுப்பூசியையும், இரண்டாவது தவணையில் மற்றொரு வகை தடுப்பூசியும் செலுத்தினால் கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் அதிகமாக உருவாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பொருத்தவரை சிம்பன்ஸியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட தீநுண்மியை (அடினோ வைரஸ்) மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்து அதனை மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கோவேக்ஸின் தடுப்பூசியானது செயலிழந்த கரோனா தீநுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது.
இந்த இரு தடுப்பூசிகளையும் மாறி, மாறி செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதுதொடா்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி விண்ணப்பித்திருந்தது. அதற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...