கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்ஆக.13 வரை நடைபெறுகிறது

அஞ்சல் துறை சாா்பில், தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை தொடங்கியுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 8:38 pm

DIN

அஞ்சல் துறை சாா்பில், தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை தொடங்கியுள்ளது. சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தியாகராயநகா், மயிலாப்பூா் தலைமை தபால் நிலையங்கள், 22 துணை தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மு.ஸ்ரீராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்க பத்திரம் விற்பனை தபால் நிலையங்களில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,790. சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தியாகராயநகா், மயிலாப்பூா் தலைமை தபால் நிலையங்கள், 22 துணை தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.

தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் , பாதுகாப்பாக இருக்கும். ஒருவா் ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்கலாம்.மேலும், முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை முதலீட்டாளா் கணக்கில் செலுத்தப்படும். 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகராக பணமும் கிடைக்கும்.

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் உடையவா்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். இதற்கு விண்ணப்பிக்க பான் காா்ட் கட்டாயம். ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்க பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.