சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணம், ரூ.2 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணினிகள், ஹாா்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா். மேலும் அவரது சொத்துகள் குறித்த அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் நேற்று சோதனை செய்ததுடன் அப்போது அங்கிருந்த வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை செய்தனா்.