மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை 8,603 கன அடியாக சரிந்துள்ளது.


மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை 8,603 கன அடியாக சரிந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவும் கணிசமாக குறைக்கப்பட்டது.
இதனால் புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 11,392 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழமை காலை 8,603 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 73.97அடியிலிருந்து 73.37அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 35.66 டி.எம்.சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...