பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருப்பூர்: சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மக்கள் சாலை மறியல்

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பாஜகவினர் மக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

News image
திருப்பூர் பாளையக்காடு பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் மற்றும் மக்கள்.
Updated On :13 ஆகஸ்ட் 2021, 9:20 am

DIN

திருப்பூர்: திருப்பூர் பாளையக்காடு பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பாஜகவினர் மக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் சீரான குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று தெரிகிறது. 

இதையடுத்து, திருப்பூர் பாஜக மாவட்டச் செயலாளர் கார்த்தி தலைமையில் பாளையக்காடு பேருந்து நிறுத்தம் முன்பாக 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் சீரான குடிநீர் விநியோகம் செய்யவும், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்கக்கோரியும் வெள்ளிக்கிழமை காலை 8.50 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் காரணமாக திருப்பூர்-ஈரோடு சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் மற்றும் மக்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.