நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை

​விடுதலைப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ. 17 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 5:25 am

DIN


விடுதலைப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ. 17 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, மக்களுக்கு அவர் உரையாற்றத் தொடங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் உரை:

"தேசியக் கொடியேற்றும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அளித்த பங்களிப்பு குறித்து முழுமையான ஆவணம் ஒன்றைத் தயாரித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடும் முயற்சியை தமிழ்நாடு அரசு உறுதியாக செய்யும்.

விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று நாட்டின் விடுதலைக்காகப் பாடுபாட்ட தியாகிளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உதவிகள் வழங்குவதில் தமிழ்நாடு அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. 

அந்த வகையில் மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ. 17 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ. 8,500-இல் இருந்து ரூ. 9,000 ஆக உயர்த்தப்படும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.