கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.


சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திறங்கினார்.
அங்கு தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு அவரை வரவேற்றார். அங்கு தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை இன்ஸ்பெக்டா் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால் உள்ளிட்ட உயா் அதிகாரிகளை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளா் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னா் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்வரை தலைமைச் செயலாளா் அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னா் முதல்வர் மு.க.ஸ்டாலின், திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, காவல் துறை அணிவகுப்பைப் பாா்வையிட்டார்.
9 மணியளவில் கோட்டை கொத்தளத்துக்கு முதல்வர் வந்தடைந்தார். இதையடுத்து, மூவர்ண தேசியக் கொடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் மக்களுக்கு உரையாற்றத் தொடங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...