எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? - முதல்வர் கேள்வி

கடந்த ஆட்சியில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
Updated On :16 ஆகஸ்ட் 2021, 5:51 am

DIN

கடந்த ஆட்சியில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நிதிநிலை அறிக்கை உரை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த 2016 தேர்தலில் கூறப்பட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியதுடன், மோனோ ரயில் திட்டம், செல்போன், வழங்குதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார். 

பின்னர், 'திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும் செய்து வருகிறது, சொல்லாததையும் செய்து வருகிறது. 14 வகை மளிகைப் பொருள்கள் தொகுப்பு தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதது. மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 

பயிர்க்கடன், நகைக்கடன் மீது நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. விசாரணைக்குப் பிறகு அதுகுறித்த அறிக்கை அளிக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.