மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு: பேரவைத் தலைவர் அப்பாவு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் செப்டர்மர் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

News image

அப்பாவு (கோப்புப்படம்)

Updated On :17 ஆகஸ்ட் 2021, 7:59 am


தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் செப்டர்மர் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றன. தமிழக நிதிநிலை அறிக்கையை நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆக. 13-ம் தேதியும் வேளாண் துறை குறித்த நிதிநிலை அறிக்கை 14-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து ஆகஸ்ட் 16 முதல் 19 வரை நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் துறை குறித்த நிதிநிலை அறிக்கை மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.