கொடநாடு விவகாரம்: ஆளுநருடன் இபிஎஸ்-ஓபிஎஸ் நாளை சந்திப்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை (ஆக. 19) சந்திக்கவுள்ளனர்.


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை (ஆக. 19) சந்திக்கவுள்ளனர்.
நாளை நண்பகல் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். இதில் கொடநாடு விவகாரத்தை திமுக மீண்டும் விசாரணைக்கு எடுத்தது குறித்து ஆளுநரிடம் பேசவுள்ளனர்.
கொடநாடு வழக்கு முடியவுள்ள நிலையில், தங்களது பெயர்களுக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் சதி நடப்பதாக ஆளுநரை சந்தித்து இபிஎஸ் - ஓபிஎஸ் முறையிட உள்ளனர்.
சட்டப்பேரவையை இரண்டு நாள்களுக்கு புறக்கணிக்கப்போவதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், நாளை இருவரும் ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...