ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சீர்காழியில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு

சீர்காழி அருகே மளிகை மற்றும் இரும்பு கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருள்கள் திருட்டு போனது சிசிடிவி காமிராக்களை உடைத்து வடநாட்டு கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.

News image
சீர்காழியில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு
Updated On :28 ஜனவரி 2024, 3:56 am

DIN


சீர்காழி: சீர்காழி அருகே மளிகை மற்றும் இரும்பு கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருள்கள் திருட்டு போனது சிசிடிவி காமிராக்களை உடைத்து வடநாட்டு கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் பணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசெல்வம் (33) புதன்கிழமை காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த ராஜசெல்வம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 25 ஆயிரம் மதிப்புடைய மளிகை பொருள்கள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த பணம் ரூ. 1 லட்சத்து 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதேபோல அருகிலுள்ள வினோத் ஏஜென்சி என்ற இரும்பு கடையை உடைத்து ரூ.25,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 8 சிசிடிவி கேமராக்களை சிலவற்றை உடைக்கப்பட்டும், துணியால் மறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதில் ஒரு காமிராவில் பதிவானவற்றில், வடநாட்டு கொள்ளையர்கள் போல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.