தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுமா? நிதியமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை பதிலளித்துள்ளார்.


தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை பதிலளித்துள்ளார்.
கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுமா என பாமகவின் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.
அவரின் கேள்விக்கு பதிலளித்து நிதியமைச்சர் பேசியது:
சமையல் எரிவாயு விலை உயர்வால் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட கிடைப்பதில்லை. மேலும், விலை குறைப்பிற்கான வரிவிதிப்பு அதிகாரமும், வருமானமும் தமிழக அரசிடம் இல்லை என்றார்.
நேற்று ஒரே நாளில் சமையர் எரிவாயு விலை ரூ. 25 உயர்த்தப்பட்டதையடுத்து ரூ.875.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் மூலம், கடந்த 8 மாதங்களில் எரிவாயு உருளையின் விலை ரூ.165 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...