மைக்ரோவேவ் அடுப்புக்கான பாத்திரங்கள் தயாரிக்க குயவர்களுக்கு உதவும் சென்னை ஐஐடி

தமிழகத்தைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களுக்கு, நவீன காலத் தேவையான மைக்ரோவேவ் அடுப்பில் வைக்கத் தகுந்த சமையல் பாத்திரங்கள் தயாரிக்க ஐஐடி சென்னை உதவுகிறது.
மைக்ரோவேவ் அடுப்புக்கான பாத்திரங்கள் தயாரிக்க குயவர்களுக்கு உதவும் சென்னை ஐஐடி
மைக்ரோவேவ் அடுப்புக்கான பாத்திரங்கள் தயாரிக்க குயவர்களுக்கு உதவும் சென்னை ஐஐடி
Published on
Updated on
1 min read

தமிழகத்தைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களுக்கு, நவீன காலத் தேவையான மைக்ரோவேவ் அடுப்பில் வைக்கத் தகுந்த சமையல் பாத்திரங்கள் தயாரிக்க ஐஐடி சென்னை உதவுகிறது.

சென்னை ஐஐடியின் ஊரகத் தொழில்நுட்பச் செயற்குழு(RuTAG), மாறி வரும் நுகர்வோர் தேவைகளுக்கேற்ப உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், தமிழகக் குயவர்களுக்கு உதவ, மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தக்கூடிய வகையில் பாண்டங்களைத் தயாரிக்க பொது ஆலையை நிறுவ உதவியுள்ளது. சந்தையில் இந்தப் பொருட்களின் மதிப்பு கூடியிருப்பதால், இது பாரம்பரியக் குயவர்களுக்கு நிலையான வருவாய் ஈட்ட உதவும்.

பல பாரம்பரிய குயவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நிலையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றன. கைவினைஞர்களின் வருவாயை அதிகரிக்க, உற்பத்தித் திறனை மட்டுமல்லாமல் கைவினைஞர்களின் ஊதியத்தையும் மேம்படுத்த கூடுதல்திறன் மற்றும் தயாரிப்புப் பயிற்சியுடன் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பெருமுடிவாக்கத்தில் பொது ஆலை ஒன்றைச் செயல்படுத்த ஐஐடி சென்னை உதவுகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தென்மண்டல பைப்லைன்ஸ் (ஐஓசிஎல்-எஸ்ஆர்பிஎல்) பிரிவின் சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் நாகர்கோவிலில் உள்ள அரசு சாரா அமைப்பான சமூக மேம்பாட்டு மையத்தைச் செயல்பாட்டுக் கூட்டாளியாகக் கொண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் நிறுவனத்துடன் இணைந்து ஐஐடி சென்னை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் குயவர்களுக்கு உதவுகிறது.

இந்த முன்னெடுப்பில் ஐஐடி சென்னையின் பங்களிப்பு குறித்து வலியுறுத்திப் பேசிய RuTAG-யின் பொறுப்பாளர் பேராசிரியர் அபிஜித் பிதேஷ்பாண்டே,  இந்த மையத்தின் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பேராசிரியர் அபிஜித் பி.தேஷ்பாண்டே, “களிமண் உற்பத்தித்திறனையும், தரத்தையும் அதிகரிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிஎஃப்சி மூலம் ஒரு பரவலாக்கப்பட்ட உள்கட்டமைப்பால், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான உரிமை அதிகரிக்கிறது. மேலும்,மையத்தின் செயல்பாடுகளைச் சுற்றி வேலை வாய்ப்புகளும் பெருகுகின்றன என்றார்.

2021 ஆகஸ்ட் 11 அன்று இந்த மையம் தொடங்கப்பட்டது.

இந்த மையத்தின் மூலம் பெறப்படக்கூடிய பயன்கள்:

1. குயவர்களின் வருவாய் மூன்றிலிருந்து நான்கு மடங்கு உயரும்.
2. பாரம்பரிய மண்பாண்டப் பொருள்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் மூலம் நான்கு மடங்கு சந்தை மதிப்பு கூடும்.
3. பெருமளவு சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதித் தரம்
4. பயிற்சி பெறுவோர் நேரடிப் பயிற்சி மற்றும் வழிகாட்டல் மூலம் தொழில் முனைவோராகவும் வாய்ப்பு
5. மாநிலத்திலுள்ள மற்ற மண்பாண்டத் தொழில் மையங்களிலும் இம்முறை தழுவப்படும் வாய்ப்பு

பல்வேறு வகையான களிமண் பொருட்களின் உற்பத்தி தொடர்பான வன் திறன், மென் திறன்களில் இதுவரை மொத்தம் 82 நபர்கள் இந்த மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com