புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கொடநாடு விவகாரம்: ஆளுநருடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:04 am

DIN

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.

கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனிடம் கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, கொடநாடு வழக்கு முடியவுள்ள நிலையில், தங்களது பெயர்களுக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் சதி நடப்பதாக நேற்று சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோர் பேசி வருகின்றனர். 

இந்த சந்திப்பில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.