திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், இருளஞ்சேரி கிராமத்தில் உள்ள ஏரி நீர் ஆதாரத்துடன் உள்ளது. இக்கிராமத்திற்கு ஆழ்குழாய் கிணறு, விவசாய கிணறுகள் மற்றும் கால்நடைகளுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஏரியில் குவியல், குவியல்களாக மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதனால் ஏரியில் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதோடு மருந்து கழிவுகளால் நீர் மாசடைவதோடு, இப்பகுதியைச் சேர்ந்த கால்நடைகள் நீர் பருகுவதால் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.