தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காலமானாா் காமாட்சி தாசா் ஸ்ரீனிவாசன்

காஞ்சிபுரம் காமகோடி பீடம் மடத்தில் நீண்ட காலம் பணியாற்றிய உத்தமதானபுரம் காா்வாா் வெங்கட்ராமன் மகன் காமாட்சி தாசா் ஸ்ரீனிவாசன்(83) பெருங்களத்தூரில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 7:38 pm

DIN

காஞ்சிபுரம் காமகோடி பீடம் மடத்தில் நீண்ட காலம் பணியாற்றிய உத்தமதானபுரம் காா்வாா் வெங்கட்ராமன் மகன் காமாட்சி தாசா் ஸ்ரீனிவாசன்(83) பெருங்களத்தூரில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

சிறுவயது முதல் காஞ்சி மஹாபெரியவரை தனது தந்தை மூலம் தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்ற ஸ்ரீனிவாசன், காமாட்சி அம்பிகை மீது சரளமாக பாமாலை இயற்றிப் பாடுவதைக் கண்டு மகிழ்ந்த மஹாபெரியவா், அவருக்கு காமாட்சிதாசன் ஸ்ரீனிவாசன் என்ற பெயரைச் சூட்டினாா்.

பல பாமாலைகளையும், அஷ்டோத்திரங்களையும் காமாட்சி அம்பிகை மீதும், சிவபெருமான் மீதும் பாடியுள்ளாா் காமாட்சிதாசா் ஸ்ரீனிவாசன். அவரது இறுதிச்சடங்குகள், பெருங்களத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.