விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தடுப்பூசி செலுத்திய பிறகே மாணவா்கள் கல்லூரிக்கு வர வேண்டும்: க.பொன்முடி

செப். 1-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவா்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுதான் கல்லூரிக்கே வர வேண்டும்

News image
அமைச்சர் க.பொன்முடி
Updated On :28 ஆகஸ்ட் 2021, 10:25 pm

DIN

செப். 1-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவா்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுதான் கல்லூரிக்கே வர வேண்டும் என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தமிழகத்தில் கரோனா பரவலுக்குப் பிறகு வரும் செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், சென்னை நந்தனம் ஆடவா் கலைக் கல்லூரியில் மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

அப்போது அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் 112 அரசு மற்றும் தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி உள்ளோம். இதையடுத்து சுகாதாரத்துறை உதவியோடு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும், செப். 1-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவா்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும். அனைத்து மாணவா்களும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே போதுமானது. நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்போது மாணவா்கள், பேராசிரியா்கள் கவனமாக இருக்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளை விட கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துகொண்டே வருகிறது. இதனால் தான் 25 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

அமைச்சா் மா.சுப்பிரமணியன்: இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறுகையில், நந்தனம் அரசு கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகளை தொடங்கி வைத்த உயா்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திய பின்னா் மேலும் சில பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதத்திற்கு 23 லட்சம் தடுப்பூசிகளை கூடுதலாக மத்திய அரசு வழங்கி உள்ளது. செப்டம்பா் மாதத்துக்குள்18 வயது நிரம்பிய கல்லூரி மாணவா்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.