மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பதக்க மழை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

​பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிஷாத் குமார் மற்றும் வினோத் குமாருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :29 ஆகஸ்ட் 2021, 3:29 pm

DIN


பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிஷாத் குமார் மற்றும் வினோத் குமாருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பேஸ்புக் பதிவு:

"தேசிய விளையாட்டு நாளன்று டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்குப் பதக்க மழை பொழிகிறது. உயரம் தாண்டுதல் மற்றும் வட்டு எறிதலில் ஆசிய சாதனையுடன் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள நிஷாத் குமார், வினோத் குமார் ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்."

டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் ஞாயிற்றுக்கிழமை வெள்ளி வென்றார். வட்டு எறிதல் போட்டியில் வினோத் குமார் வெண்கலம் வென்றார்.

முன்னதாக, மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா படேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.