தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார். 

News image
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
Updated On :29 ஆகஸ்ட் 2021, 11:54 am

DIN

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவதரித்த கிருஷ்ண பகவான் மக்களை காப்பதற்காக அசுரர்களை அழித்ததைப்போலவே தடுப்பூசி மூலம் கரோனா எனும் நோயை அழிக்க அனைவரும் இந்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் உறுதியேற்போம். 


இந்த நாள் நம் அனைவர் வாழ்விலும் ஒளி கூட்டும் நாளாக மட்டுமல்லாது, வழிகாட்டும் நாளாகவும் அமைய வேண்டும் என அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.