புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து விவாதம் கூடாது: தீர்மானம்

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான விவாதம் செய்யக்கூடாது என, புதுவை சட்டப்பேரவையில் திங்கள் கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து விவாதம் கூடாது: தீர்மானம்
Updated On :30 ஆகஸ்ட் 2021, 10:33 am

DIN

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள 13வது காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான விவாதம் செய்யக்கூடாது என, புதுவை சட்டப்பேரவையில் திங்கள் கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மூன்றாவது நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவாக கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிரான ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தனர்.

முதல்வர் ரங்கசாமி கொண்டுவந்த தீர்மானத்தில், காவிரி  குறுக்கே கர்நாடக மாநிலம் மேக்கே தாட்டுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, புதுவை அரசு சார்பில் ஏற்கனவே பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக காவிரி நீர் பிரச்னை குறித்து 13-வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அதில் மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்க கூடாது என்று, புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் ரங்கசாமி கொண்டுவந்த இந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.